மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படம் இந்திய அளவில் 6 கோடி ரூபாயை முதல் நாள் வசூலாக அள்ளியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 2.27 கோடி ரூபாயும், ஆந்திராவில் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்படம் சுமார் 1.77 கோடி ரூபாயும் மற்ற மாநிலங்களில் 2 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆந்திராவைப் பொறுத்தவரையில் அனுஷ்காவினால்தான் இந்த வசூல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஏறக்குயை 60 கோடி ரூபாய் செலவில் தயராகியுள்ள இப்படத்தின் வசூல் அதன் முதலீட்டைத் தாண்டுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
விமர்சன ரீதியாக பல கருத்துக்கள் எழுந்தாலும் ‘விஷுவல்’ ரீதியாக படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.