பல நட்சத்திரங்கள் நடித்த ‘ஜன்னல் ஓரம்’ 29ம் தேதி ரிலீஸ்…

jannal ooram_00004பார்த்திபன், விமல், விதார்த், ரமணா, பூர்ணா, மனிஷா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து, வித்யாசாகர் இசையில் கரு.பழனியப்பன் இயக்கியிருக்கும் படம் ‘ஜன்னல் ஓரம்’ அடுத்த வாரம் 29ம் தேதி வெளியாகிறது.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஆர்டினரி’ என்ற படத்தின் ரீமேக்தான் ‘ஜன்னல் ஓரம்’.

பல நட்சத்திரங்களின் கூட்டணி இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதால் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி’ ஆகிய படங்கள் ‘மல்டி ஸ்டார்’ படங்களாக அமைந்து நல்ல வெற்றியைப் பெற்றன.

அந்த வரிசையில் இந்த படமும் நிச்சயம் இடம் பெறும் என்கிறார்கள் படக்குழுவினர்.

 

Read Previous

‘வட கறி’ படத்தில் நடிக்கிறார் சன்னி லியோன்…

Read Next

டிசம்பர் 6-ல் ‘கல்யாண சமையல் சாதம்’ ரிலீஸ்…