1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘கோலி சோடா’ – மேலும் திரையரங்குகள்…

விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடித்துள்ள ‘கோலி சோடா’ படம் இரு தினங்களுக்கு முன் 24ம் தேதி வெளிவந்தது. விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வரும் இத்திரைப்படம் இன்று முதல் மேலும் 40 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மிகப் பெரிய ஹீரோக்கள் நடித்த…

எனக்குக் கிடைத்த பெரும் பேறு – கமல்ஹாசன்

பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் பெரும் பேறு அடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “பல் துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில், தகுதியானவர்கள் திறமையானவர்கள் பலர் இருக்கையில், என் பெயர் பத்ம…

கமல்ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது…

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கமல்ஹாசனுக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது. கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் விநாயக்ராம், டென்னிஸ் வீரர் லியான்டர் பயஸ் உள்ளிட்ட 24 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…

தெலுங்குக்குப் போகும் ‘ஜில்லா’…

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து பொங்கலன்று திரைக்கு வந்த ‘ஜில்லா’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் வியாபார ரீதியாக நல்ல வசூலை கொடுத்து வருகிறது என்கிறார்கள். மோகன்லால் நடித்தால் மலையாளத்தில் அப்படியே தமிழ்ப் படமாகவே ரிலீஸ் செய்து வசூலைப் பார்த்து விட்டார்கள். அதனால்,…

இளையராஜாவுக்கு வைரமுத்து புதிய யோசனை…

வைரமுத்து முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து  சீனு ராமசாமி இயக்க உள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் பணிபுரிய உள்ளார். யுவன் இசையில் பாடல்கள் எழுதுவது தொடர்பாக முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் வைரமுத்து பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில், இளையராஜா பற்றியும் சில கருத்துக்களை…

கோலி சோடா – விமர்சனம்

ஆக்‌ஷன் ஹீரோக்கள் கிடையாது, கிளாமர் ஹீரோயின்கள் கிடையாது, ஆனாலும், அசத்தலான , யதார்த்தமான ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். இதுவரை பாடல்களுக்கும், ஒரு சில நகைச்சுவைக் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கோயம்பேடு மார்க்கெட்டை முதன் முறையாக ஒரு முழு படத்துக்கும் பயன்படுத்தியிருக்கிறார்…

விஜய்யை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்

பொங்கல் தினமான கடந்த 14ம் தேதியன்று முக்கிய தொலைக்காட்சிகளில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில், திரைக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின. சன் டிவியில் விஜய், அமலா பால் நடித்த ‘தலைவா’ படமும், விஜய் டிவியில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த…

‘மொளகா பஜ்ஜி’ ஹீரோயின்…

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், கோகுலகிருஷ்ணா இயக்கத்தில், தரண் இசையமைப்பில் நானி, புதுமுகம் வாணி கபூர் நடிக்கும் ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் நானியை, விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி வைத்தார். நாயகி வாணி கபூரை , சிம்ரன் அறிமுகப்படுத்தி வைத்தார்.…

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று 24 ஜனவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… மாலினி 22 பாளையம்கோட்டை ராஜ்குமார் தியேட்டர்ஸ் பி.லிட். தயாரிப்பில் ஸ்ரீப்ரியா இயக்கியிருக்கும் படம். இசை – அரவிந்த் சங்கர். நித்யா மேனன், கிரிஷ் ஜே. சத்தார், நரேஷ், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.…

‘இல்ல ஆனாலும் இருக்கு’ பெயர் மாறியது…

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரித்து வரும் ‘இல்ல ஆனாலும் இருக்கு’ படத்தின் பெயர் ‘யாமிருக்கே பயமே’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய டீகே இயக்கும் இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், ஓவியா, கருணா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரசாத் இந்த படத்திற்கு…