1. Home
  2. News

Category: News

‘வீரம், ஜில்லா’ – 3 நாள் வசூல் விவரம்…

இதுவரை தமிழ்ப் பட உலகில் எந்த வரையிலும் இல்லாத அளவிற்கு ‘வீரம், ஜில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக சில நாடுகளில் ‘தூம் 3’ படத்தின் வசூலைக் கூட முறியடித்துள்ளது என சொல்கிறார்கள். தமிழ்ப் படங்கள் உலக…

‘ஜில்லா’ – சிரிக்காத தயாரிப்பாளர்…சிரிக்க வைத்த இயக்குனர்…

‘ஜில்லா’ படத்தின் சக்சஸ் மீட் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. விஜய், சூரி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். சில வினியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படம் ‘துப்பாக்கி’ படத்தை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது என்று அவர்களது கருத்தைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய…

‘வீரம்’ வெற்றிக்கு விஜய் வாழ்த்து…

ஜனவரி 10ம் தேதி வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக நன்றாக ஓடிக் கொண்டு வருவதாக வினியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். ‘ஜில்லா’ படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை ‘ஜில்லா’ படக் குழுவினர் விஜய், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் இமான், சூரி, மகத், மற்றும்…

அனைத்து திரையரங்குகளிலும் ‘ஹவுஸ் ஃபுல்’ காட்சிகள்…

தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக அமைந்து, ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளிலும் ‘ஹவுஸ் ஃபுல்’ என போர்டுகள் தொங்குகின்றன. பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அஜித் நடித்த ‘வீரம்’, விஜய் நடித்த ‘ஜில்லா’ ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்தன. இரண்டு…

அவங்களும் ‘ட்ரிம்’ பண்றாங்களாம்…

‘ஜில்லா’ படத்தைதானே 10 நிமிடம் குறைச்சி ‘ட்ரிம்’ பண்ணியிருக்காங்க…அவங்களும்னு சொன்ன உடனே ‘வீரம்’ படத்தையும் ட்ரிம் பண்றாங்களான்னு யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம். இந்த அவங்க…ஆந்திரா அவங்க…ஆந்திராவுல நம்ம விஜய் மாதிரி மாஸ் ஹீரோவா இருக்கிற ஹீரோ மகேஷ் பாபு. இவர் நடிச்ச படங்களோட ரீமேக்கை இங்க தமிழ்ல…

`ஜில்லா’ – பாடல் நீக்கம்…ரசிகர்கள் அதிருப்தி…

`ஜில்லா’ படத்தில் இடம் பெற்ற `மாமா…மாமா…ட்ரீட்டு…’ என்ற பாடல் நேற்று முதல் நீக்கப்பட்டு விட்டது. ஆனால், படத்தின்  இசை வெளியான போதே அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தில் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஒரு `ஃபாஸ்ட பீட்’ பாடலாகவும் இன்றைய இளம் ரசிகர்களைக் கவரும் விதத்திலும் இருந்த அந்த…

காதலர் தினத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’

2012ம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்றான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தை அடுத்து தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் ‘இது கதிர்வேலன் காதல்’. நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர்…

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…

இன்று ஜனவரி 10ம் தேதி வெளியாகும் இரு முக்கிய படங்களைப் பற்றி நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் நம் கடமையிலிருந்து சிறிதும் தவறாமல் இந்த செய்தியையும் எழுதுகிறோம். வீரம் விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர்…

சிவகார்த்திகேயனின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’…

விஜய் டிவியில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிவகார்த்திகேயன் பங்கு பெறும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சியின் வீடியோ முன்னோட்டம்.. இந் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை இயக்கிய சில இயக்குனர்களும், விஜய் டிவி நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலந்து கொள்கிறார்கள்… இந்த நிகழ்ச்சி ஜனவரி 14, செவ்வாய் கிழமை, மதியம்…

தனுஷ் – காஜல் அகர்வால் புதிய ஜோடி…

தனுஷ் தற்போது ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். ஏற்கெனவே, ‘பொல்லாதவன்’ படத்தில்…