எனக்குக் கிடைத்த பெரும் பேறு – கமல்ஹாசன்

kamal-haasan-padma-bhusan-award-newsபத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் பெரும் பேறு அடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்,

“பல் துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில், தகுதியானவர்கள் திறமையானவர்கள் பலர் இருக்கையில், என் பெயர் பத்ம பூஷன் பட்டியலில் இடம் பெற்றது எனக்குக் கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன்.

அரசுக்கு நன்றி. தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது.

நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு. பத்ம பூஷன் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். முக்கியமாக என் நண்பர் வைரமுத்து அவர்களுக்கு,” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

நமது இணையதளம் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துகள்…

Read Previous

கமல்ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது…

Read Next

‘கோலி சோடா’ – மேலும் திரையரங்குகள்…