தமிழ்நாட்டில் ‘வீரம்’தான் No.1

பொங்கலுக்கு வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ இரு படங்களிலும் எந்த படம் முதலிடத்தைப் பிடித்தது என்பதை தெரிந்து கொள்ள அஜித், விஜய் இருவரது ரசிகர்களும் மிகவும் ஆர்வமாகவே உள்ளனர்.

வெளிநாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சில நாடுகளில் (மலேசியா, யுகே) ‘ஜில்லா’ வசூலில் முதலிடம் பிடித்திருந்தாலும் ‘வீரம்’ திரைப்படமும் குறைவான வித்தியாசத்திலேயே இரண்டாமிடத்தில் இருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ‘வீரம்’ படம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ‘வீரம்’ திரைப்படம் இன்றும் கூட பல திரையரங்குகளில் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்டும் அளவிற்கு கூட்டம் அலை மோதுகிறதாம்.

ஆனால், ‘ஜில்லா’ படத்திற்கு பாதி அளவு மட்டுமே திரையரங்குகள் நிரம்புகிறது என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 நாட்களில் வசூலான தொகையைப் பொறுத்தவரையில் ‘வீரம்’ படம் ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

‘ஜில்லா’ படம் 35 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டாமிடத்தில் உள்ளது.

கேரளாவைப் பொறுத்தவரையில் சுமார் 5 கோடிக்கு மேல் வசூல்  செய்ததாக சொல்லப்பட்டாலும் அதை விஜய் படம் என்று சொல்லாமல் மோகன்லால் படமாகவும்தான் அங்கு பார்க்கிறார்களாம்.

அப்படிப் பார்த்தால் அந்த வசூல் பெருமையை மோகன்லாலும் சேர்ந்துதான் பகிர்ந்து கொள்கிறார்.

கர்நாடகாவில் ‘வீரம்’ படம்தான் முன்னணியில் உள்ளதாம். மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.

எனவே, தென்னிந்திய அளவில் அதிகமாக வசூல் செய்து அஜித் மீண்டும் ‘பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ’ என்பதை நிரூபித்திருக்கிறார்.

வீர நடை தொடரும்…என்பதே வினியோகஸ்தர்களின் தீர்ப்பு…

Read Previous

‘தூம் 3’-யை மிஞ்சிய ‘ஜில்லா’…

Read Next

கமலுக்கு வாழ்த்து சொல்லாத முக்கிய நடிகர்கள்…