பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட பட்டியலைப் பார்த்து பத்திரிகையாளர்கள் பலருக்கு அதிர்ச்சி.
அதில் வைரமுத்துவின் பெயர் ‘வைரமுத்து ராமசாமி தேவர்’ என்றிருந்தது.
இன்னும் சில ஆங்கில செய்தி இணையதளங்கள் ‘விஆர் தேவர்’ என்றே குறிப்பிட்டிருந்தன. நாமும் அந்த இணையதளங்களைப் பார்த்து கொஞ்சம் குழம்பித்தான் போனோம்.
தமிழ்நாட்டில் யார் ‘விஆர் தேவர்’ என்று அழைக்கப்படுகிறார் என்று விறுவிறுப்பாக ஆராய்ச்சியில் இறங்கினோம்.
ஆனால், சிறிது நேரத்தில் முறையான அறிவிப்பு வெளியானதும் அந்த சந்தேகம் தானாகவே தீர்ந்தது.
வைரமுத்துவின் பெயர்தான் அப்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இப்போது யாருமே சாதிப் பெயரை பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் விடாப்பிடியாக சாதிப் பெயரை போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
ஆனால், சினிமாவைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் சாதி அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்வதேயில்லை.
அப்படியிருக்க வைரமுத்துவின் பெயர் சாதிப் பெயருடன் மத்திய அரசு வெளியிட்டுள்ள விருதுப் பட்டியலில் இடம் பெற்றது நடுநிலையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆனால், இது தொடர்பாக வைரமுத்து இதுவரை எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“அட…சாமரம் வீசிய பாமர சாதிகள்…சாதனை கண்டுவிடும்…” என்று எழுதியதெல்லாம் சினிமாவிற்குத்தானா ????