இயக்குனர், நடிகர் பார்த்திபன் தற்போது நடிக்காமல், இயக்கம் மட்டும் செய்து வரும் படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’.
இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவரும், வித்தியாசமான நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ள விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
இது தொடர்பாக பார்த்திபன் கூறியதாவது,
“கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்ட மறுநாளே தளத்திற்கு வந்து நின்றார், Sorry, உட்கார்ந்தார் விஜய் சேதுபதி.
அதுவும் காரில் வந்தால் நேரம் ஆகிவிடும் என பைக்கில் வந்தார்.
கார் கண்ணாடியின் வைப்பரில் சிக்காத இடத்தில் ஒட்டிக் கொள்ளும் பசும் பூவாய் ஒட்டிக் கொண்டது அவரது நட்பூ,” என்று கூறியுள்ளார்.