நானி, வாணி கபூர் நடித்துள்ள ‘ஆஹா கல்யாணம்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகும் வாணி கபூர் ‘ஷுத் தேசி ரொமான்ஸ்’ ஹிந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற ஃபிலிம் பேர் விருதையும் பெற்றுள்ளார்.
‘ஆஹா கல்யாணம்’ திரைப்படம் மூலம் தமிழிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க ஆசைப்படுகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டில் இவரை அறிமுகப்படுத்திப் பேசியவர் சிம்ரன். ஒரு காலத்தில் தமிழ்நாட்டையே தனது நடிப்பாலும், நடனத்தாலும் அசத்திய சிம்ரனின் வாழ்த்து இவரை ரொம்பவே குளிர்ச்சியடைய வைத்து விட்டதாம்.
‘ஆஹா கல்யாணம்’ படத்திலும் வாணியின் நடனமும், நடிப்பும் கண்டிப்பாக ‘ஆஹா….’ என ஆச்சரியப்பட்டு பேச வைக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
மூன்றே மாதத்தில் தமிழை அழகாகப் பேசக் கற்றுக் கொள்ளப் போவதாகவும் சபதம் எடுத்துள்ளாராம். அழகு மயில்கள் அரை குறையாப் பேசினாலே போதும். அழகாத்தான இருக்கும்…
இந்த ஆர்வம் போதும், நீங்கள்லாம் நல்லா வருவீங்க…