1. Home
  2. News

Category: News

விஜய், அஜித் படங்களை பாலா இயக்குவாரா ?

தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் பாலா. விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோருக்கு தமிழில் அவர்களுக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகக் காரணமானவர். ஆனால், இதுவரை விஜய், அஜித் இருவரையும் வைத்து படம் எதையும் இயக்கவில்லை. ‘நான் கடவுள்’ படத்தில் கூட முதலில் அஜித்தான் நடிப்பதாக இருந்தது. இவர்களிருவர் நடிக்கும்…

டாக்டர் பென்னி – கவுண்டமணி ரீ என்ட்ரி…

எத்தனை பேர் வந்தாலும் நம்ம கவுண்டரை அடிச்சிக்க முடியுமான்னு ‘கவுன்டர்’ டயலாக் அடிக்கிற எல்லாருமே சொல்வாங்க… அப்படி பேச்சுக்கு எதிர் பேச்சு பேசறதுக்கு தமிழ் சினிமாவுல கவுண்டமணியை மிஞ்ச யாருமே கிடையாது. நீ….ண்ட இடைவெளிக்குப் பிறகு செந்தில் குமார் இயக்கிற ‘வாய்மை’ படத்துல டாக்டர் பென்னியா நடிக்கிறாரு கவுண்டமணி.…

சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ இசை வெளியீடு விரைவில்…

சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ இசை வெளியீடு விரைவில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. இது பற்றிய தகவலை படத்தின் இயக்குனரான சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாகவும், அடுத்த மாதம்…

‘துப்பாக்கி’ இன்று 100வது நாள்

கலைப்புலி எஸ்.தாணு வழங்க வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விஜய்,  காஜல் அகர்வால், ஜெயராம் மற்றும் பலர் நடித்த ‘துப்பாக்கி’ படம் இன்று 100வது நாளைக் கொண்டாடுகிறது. 2012ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதியன்று ‘துப்பாக்கி’ வெளியானது. ஏ.ஆர். முருகதாஸ் ,…

ஷாரூக்குடன் ஆட்டம் போடும் பிரியாமணி

தலைப்பைப் பார்த்து ஏதும் தப்பா நினைச்சிட்டீங்கன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை. ஏன்னா, இந்த ஆட்டம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக. ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக்கான்,  தீபிகா படுகோனே நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடப் போகிறார் பிரியா மணி. இந்த பாடலின் படப்பிடிப்பு இன்று புனே…

குடித்து, கூத்தடிக்க வேண்டுமா ? பாரதிராஜாவுக்கு இளையராஜா பதில்

‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவைப் பற்றி பாரதிராஜா மேடையில் குறை கூறியும், புத்திமதி சொல்லிப் பேசியும் இருந்ததாக ஒரு வாசகர் , குமுதம் இதழில்  கேட்ட கேள்விக்கு  இளையராஜா, அவருடைய மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார். வாசகர் கேட்ட கேள்வி, “மதுரையில் உங்கள் நண்பர் டைரக்டர் பாரதிராஜாவின்…

முனி – 3 – மாறிய இசையமைப்பாளர் மாற்றியது யாரோ ?

ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘முனி – 3’. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸீ நடிக்கிறார். இப்படத்திற்கு தற்போது ‘கொலை வெறி’ புகழ் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைப்பார் என சொல்லப்பட்டிருந்தது. இடையில் என்ன…

விஸ்வரூபம் – மலேசியாவில் தடை நீங்கியது

‘விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த மாதம் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் இந்த மாதம் 7ம் தேதி வெளியானது. மலேசியாவில் கடந்த மாதம் 24ம் தேதியன்றே படம் திரையிடப்பட்டது. ஆனால் மலேசிய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதன் பேரில் மறுநாள் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. படத்தின் மீதான…

விஜய், மோகன்லால் நடிக்கும் ‘ஜில்லா’ மே மாதம் ஆரம்பம்

விஜய் தற்போது விஜய் இயக்கத்தில் ‘தலைவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் அடுத்து நடிக்கப் போகும் படம் ‘ஜில்லா’. இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு…

கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ அடுத்த மாதம் ஆரம்பம்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி – ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து  ராஜேஷ் இயக்கும் புதிய படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இந்த படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை – தமன்.…