தமிழுக்கு வரும் அசின்…

asinசின் கடைசியாக தமிழில் ‘காவலன்’ படத்தில் நடித்தார். அதன் பின்  இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்போது புதிதாக எந்த ஹிந்திப் படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

‘கஜினி’ படத்தின் மூலம் ஹிந்தியில் 2008ம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து அசின் இதுவரை 6 ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

தற்போது, தமிழ், தெலுங்கில் நடிப்பதற்காக பல புதிய கதைகளை கேட்டு வருகிறாராம். விரைவில் அவருக்குப் பிடித்தமான கதை ஒன்றில் மீண்டும் ஹிந்தியை விட்டு இந்தப் பக்கம் வருவார் எனத் தெரிகிறது.

Read Previous

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா…

Read Next

‘கடல்’ அடுத்து ‘எல்லை’ – மீண்டும் வருகிறார் மணிரத்னம்

Most Popular