கமலுக்கு வீடு கிடைக்குமா ?

kamalhassan‘விஸ்வரூபம்’ படத்திற்காக அடகு வைத்த தனது வீட்டை கமல் விரைவில் மீட்பாரா என்பது ஒரு கேள்வியாக எழுந்துள்ளது.

‘விஸ்வரூபம்’ படம் ஏறக்குறைய 90 கோடி ரூபாய் செலவில் தயாராகி, பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த மாதம் வெளியானது. முதல் சில வாரங்களிலேயே படம் நல்ல வசூலைப் பெற்றது.

இதனிடையே கமல் அவருடைய வீட்டை மீண்டும் அடகு வைத்துள்ளதாகத் தெரிகிறது.

படத்திற்காக தனி நபர் ஒருவரிடமிருந்து பெற்ற கடனை திருப்பி அடைப்பதற்காக தற்போது ஒரு வங்கியில் வீட்டை வைத்து அவருக்கு கடனை திருப்பிக் கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் வசூல் நன்றாகவே இருந்து வருவதால் விரைவில் அவருடைய வீட்டை வங்கியிடமிருந்தும் மீட்டு விடுவார் என்றே தெரிகிறது.

Read Previous

‘ஆல் இன் ஆல்…’ ஆரம்பமானது…

Read Next

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா…