நீரஜ் பான்டே இயக்கத்தில் அக்ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய் நடித்து ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ‘SPECIAL 26’.
இந்த படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இரு மொழிகளிலும் பிரபலமான ஹீரோ ஒருவரை வைத்து இப் படத்தை நீரஜ் பான்டேயின் ஃபிரைடே பிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் தயாரிக்க உள்ளதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
யாரை ஹீரோவாகத் தேர்வு செய்யலாம் என்பகு குறித்து விவாதம் நடந்து வருவதாகத் தெரிகிறது.
விரைவில் முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.