1. Home
  2. News

Category: News

கானா பாடகராக மகாபா ஆனந்த் நடிக்கும் ‘அட்டி’…

E 5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜினரி மிஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அட்டி’. நாயகனாக மா.கா.பா மற்றும் நாயகியாக அஸ்மிதா நடிக்க ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேந்திரன், அருள்தாஸ், ராம்ஸ், அழகு, கலை, மிப்பு, தங்கதுரை, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். கதை,…

நான் தனுஷின் ரசிகன் – ஹிந்தி இயக்குனர் பால்கி…

“சீனிகம், பா” போன்ற ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி தற்போது அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிக்க ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘ராஞ்சனா’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்து வரும் ஹிந்திப் படம் இது. இந்தப் படத்தில் தனுஷை நடிக்க வைக்க என்ன காரணம்…

நடிகர் சங்க விவகாரம் – விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை…

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க விவகாரம் குறித்து கடந்த சில வருடங்களாகவே தற்போது பதவியில் உள்ளவர்களுக்கும், இன்றைய தலைமுறை நடிகர்களான விஷால் உள்ளிட்ட அவருடைய நண்பர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. நடிகர் சங்க பழைய கட்டிடம், அரங்கத்தை இடித்து விட்டு அங்கு திரையரங்கத்துடன் கூடிய கட்டிடத்தைக் கட்ட…

பாலிவுட்டுக்குப் போகும் அனிருத்…

‘கத்தி’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யுடன் முதன் முறையாக இணைந்த அனிருத், அடுத்து முருகதாஸ் ஹிந்தியில் இயக்கவிருக்கும் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். தமிழில்  சாந்தகுமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களின் பலத்த பாராட்டைப் பெற்ற ‘மௌன குரு’ படத்தைத்தான் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். கதையில்…

‘கத்தி’ கதை விவகாரம்…விஜய் பக்கம் திரும்புகிறதா…?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளி வரும் ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று ஏற்கெனவே சென்னையை அடுத்த மிஞ்சூரைச் சேர்ந்த கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்து பின்னர் வாபஸ் பெற்று விட்டார். இந்த சூழ்நிலையில் விஜய்…

பெங்களூரு திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’…

அறிமுக இயக்குனர் பிரம்மா .ஜி இயக்கத்தில் ஜே .எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ் குமார் மற்றும் கிறிஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி தயாரித்துள்ள படம் ‘குற்றம் கடிதல்’. ஜிம்பாப்வே திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது சர்வதேச திரைப்பட…

‘என்னை அறிந்தால்’ டிசம்பரில் இசை வெளியீடு…

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி “மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம்” ஆகிய படங்களில் சூப்பர்…

ஜி.தனஞ்செயன் எழுதிய ‘Pride Of Tamil Cinema’…

இந்தியத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் யுடிவி நிறுவனத்தின் தென்னிந்திய நிர்வாக தலைவராக இருப்பவர் ஜி.தனஞ்செயன். திரைப்பட தயாரிப்பில் மட்டுமல்லாது தமிழ்த் திரைப்படங்களை மிகவும் நேசிப்பவர், ரசிப்பவர். தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய சிறந்த ஆய்வாளராகவும் அவர் இருந்து வருகிறார். 1931-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு…

மிருணாள் சென் பாராட்டிய இயக்குனர் ருத்ரையா மரணம்…

தமிழ்த் திரையுலகம் மறந்து போன மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ருத்ரையா சற்று முன்னர் சென்னை, தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் மரணடைந்தார். நல்ல சினிமாவை நேசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு ருத்ரையா என்ற இயக்குனரை என்றுமே மறக்க முடியாது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த ‘அவள் அப்படித்தான்…

விஜய் படம்…நடிகை ஸ்ரீதேவி மகிழ்ச்சி…

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தித் திரையுலகிலும் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் ஃபேன்டஸி மற்றும் சரித்திரப் படத்தில் ஸ்ரீதேவி…