‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வேல்ராஜ் மீண்டும் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
தனுஷ் தற்போது தமிழில் ‘மாரி’ படத்திலும், ஹிந்தியில் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்து வருகிறார்.
தனுஷ், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள ‘அனேகன்’ திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.