விஷால் ஜோடியாக காஜல் அகர்வால்…

vishal-kajal-agarwalஇந்த செய்தியும் ஒரு புத்தம் புதிய ஜோடியைப் பற்றித்தான். விஷால், காஜல் அகர்வால் இருவரும் முதன் முறை இணையப் போகிறார்கள்.

‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் ஒரு படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில்தான் விஷால் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறாராம்.

விஷால் தற்போது ‘ஆம்பள’ படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளிவர உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதன் பின் பொங்கலுக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் ஆரம்பமாக உள்ளதாம்.

இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் தயாரிக்க உள்ளார்கள்.

 

Read Previous

தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன்…

Read Next

The come back of ‘Mahabaratham’…