சித்தார்த், அஷ்ரிதா மற்றும் பலர் நடித்த ‘உதயம் என்எச் 4’ படத்தை இயக்கிய மணிமாறன் தற்போது இயக்கி வரும் படம் ‘புகழ்’.
வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வழங்க, ஃபிலிம் டிபார்ட்மெண்ட் நிறுவனம் சார்பாக சுஷாந்த் பிரசாத், கோவிந்தராஜ் தயாரிக்கும் படம் இது.
இப்படத்தில் ஜெய், சுரபி, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜெய் இந்தப் படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
வாழ்க்கையில் பல விதமான தடைகளைச் சந்தித்தாலும் எப்படியாவது புகழ் பெற வேண்டும் என்று துடிக்கும் ஒருவனின் கதைதான் இந்த ‘புகழ்’ திரைப்படமாம்.