‘காவியத் தலைவன்’ – வருண் மணியனைப் பாராட்டிய த்ரிஷா…

trisha kaaviya thalaivan news‘காவியத் தலைவன்’ படத்தின் தயாரிப்பாளரான வருண் மணியனை மட்டும் த்ரிஷா ஸ்பெஷலாகப் பாராட்டியிருக்கிறார். காரணம் வேறு ஒன்றுமில்லை, த்ரிஷாவின் காதலர் என கிசுகிசுக்கப்படும் வருண் மணியன் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனமும் சஷிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும்தான் இணைந்து ‘காவியத் தலைவன்’ படத்தைத் தயாரித்துள்ளது.

‘காவியத் தலைவன்’ படத்திற்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. பலரும் படத்தின் இயக்குனர் வசந்தபாலன், படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களைப் பாராட்டி வரும் வேளையில் த்ரிஷா மட்டும் அப் படத்தின் தயாரிப்பாளரான வருண் மணியனை மட்டும் ‘டேக்’ செய்து பாராட்டியிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சற்று முன்னர் டிவிட்டரில் த்ரிஷா குறிப்பிட்டுள்ளதாவது, “காவியத் தலைவன்’, குழுவினரின் அற்புதமான முயற்சி. அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நல்ல படங்களை ரசிப்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். இப்படிப்பட்ட படத்திற்காக நன்றி, வருண் மணியன்,” என த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அனைவருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் இடையில் ஒன்றுமில்லை என்பது உங்களுக்கும் புரிந்திருக்கும்.

 

Read Previous

‘லிங்கா’வைக் கண்டு பயப்படாத ‘பிசாசு’…

Read Next

ஜெய் நடிக்கும் ‘புகழ்’…