1. Home
  2. News

Category: News

சிம்பு ஜோடியாக பல்லவி…

சிம்பு நடிக்கும் இரண்டு புதிய படங்களின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு படம் பாண்டிராஜ் இயக்கும் படம், மற்றொன்று கௌதம் மேனன் இயக்கும் படம். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்குப் பின் நயன்தாரா நடிக்கிறார். கௌதம் மேனன்…

மீண்டு(ம்) வருகிறார் ராமராஜன்…

80களில் பல ஹிட் படங்களைக் கொடுத்து இன்று வரை புகழின் வெளிச்சத்தில் இருப்பவர் ராமராஜன். செல்லமாக கிராமராஜன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கி பல நாட்கள் ஓய்வில் இருந்தார். இப்போது புதுத் தெம்புடன் மீண்டும் நடிக்க வருகிறார். வேல் பிலிம் மேக்கர்ஸ் என்ற…

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தல தளபதி’…

அஜித்துடன் இணைந்த ‘மங்காத்தா’ படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய பின் ஸ்டார் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் வெங்கட் பிரபு. ‘பிரியாணி’ ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே அஜித், விஜய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்ற அவரது மிகப் பெரிய ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அது பற்றி…

‘ஹிப் ஹாப் தமிழன் ஆதி’யின் ‘இன்டர்நேஷனல் தமிழன்’ ஆல்பம்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற ‘ஹிப் ஹாப்’ இயக்கம் ‘ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப்’, தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ஹிப் ஹாப்’ கலைஞர் ‘ஹிப் ஹாப் தமிழன் ஆதி’-யுடன் இரண்டாவது முறையாக இணையப் போவதாக அறிவித்துள்ளார்கள். Jay Z, Robin Thicke, Usher போன்ற சர்வதேச ‘ஹிப் ஹாப்’ ஜாம்பவான்களுடன்…

அஜித் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் கதை…

அஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருந்தாலும் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் ‘நரைத்த’…

ஊடகங்களை எதிர்க்கும் வைரமுத்து பேச்சு…சரியா…

சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்துவின் பேச்சு ஊடக மக்களிடையே கடும் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது. அந்த விழாவில் வைரமுத்து பேசியதாவது, “இந்த மூன்று ஆண்டுகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஒரு பெரிய ஹீரோவின் படம், கடந்த ஐந்து வருடங்களாக எப்படிப்…

சிம்பு ஜோடி – நயன்தாரா சம்பளம் 2 கோடி ?

சிம்பு ஜோடியாக நயன்தாரா நடிக்க எப்போது சம்மதித்தாரோ அப்போதிருந்தே புதுப் புது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவற்றில் எந்த அளவுக்கு உண்மை என்பது அவர்களாகவே சொன்னால்தான் உண்டு. அது இப்போதைக்கு நடக்கவும் போவதில்லை. சிம்புவுடன் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க இயக்குனர் பாண்டிராஜ்தான் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். படத்தில்…

சரத்குமார் – இனியா நடிக்கும் ‘வேளச்சேரி’

சிவம் மூவீஸ் தயாரிப்பில் திருமலை வேந்தன் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – இனியா நடிக்கும் படம் ”வேளச்சேரி”. இந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர்  நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.  மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும்…

கோவா – சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’

கோவாவில் நடைபெற்று வரும் 44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’ திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த ரசிகர்கள் படம் திரையிடப்பட்ட ஐநாக்ஸ் திரையரங்கம் முழுவதும் குழுமியிருந்தனர். அடுத்து 29ம் தேதியன்றும் படம் திரையிடப்பட இருக்கிறது. இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியிருந்த ஒரே…

‘விடியும் முன்’ – தமிழ் சினிமாவில் ஒரு விடியல்…

2012ம் ஆண்டு  புதிய களம், வித்தியாசமாக கதை சொல்லும் முறை ஆகியவற்றைக் கொண்ட சில படங்கள் நல்ல வரவேற்பையும், நல்ல வெற்றியையும் பெற்றன. அது இந்த ஆண்டிலும் தொடர்வது தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய ஒரு விஷயம். அந்த வரிசையில் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள ‘விடியும் முன்’ திரைப்படம்…