‘மங்காத்தா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் ‘பிரியாணி’ திரைப்படம் இம்மாதம் 20ம் தேதி வெளிவர உள்ளது.
அடுத்ததாக வெளி வரும் மிகப் பெரிய படம் ‘பிரியாணி’தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கே இப்படம் வெளிவர வேண்டியது, பின்னர் பொங்கல் என்றார்கள், ஆனால், ‘வீரம், ஜில்லா’ பொங்கலுக்கு வெளிவருவதால் அதற்கு முன்னதாக இம்மாதம் 20ம் தேதியே இப்படத்தை வெளியிடுகிறார்கள்.
இதனால் டிசம்பர் 13ம் தேதி வெளிவர இருக்கும் ‘இவன் வேற மாதிரி’ பதறிப் போய் இருக்கிறார்களாம்.
வழக்கமான மசாலா கதை என்பதுடன், ‘கும்கி’ என்ற ஒரே வெற்றிப் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கிறார். நாயகி வேறு புதுமுகம். பாடல்களும் இன்னும் பரபரப்பாகப் பேசப்படவில்லை போன்ற பல காரணங்களால் இந்த படத்தை திரையரங்குகளில் ஒரு வாரம் மட்டும்தான் திரையிடுவோம் என்று வேறு சொல்லியிருக்கிறார்களாம்.
‘பிரியாணி’ படத்தினைக் காரணம் காட்டித்தான் இந்த ஒரு வாரம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
அதனால், ‘இவன் வேற மாதிரி’ குழுவினர் வேறு வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்களாம்….