சிம்பு – ஆன்ட்ரியா இடையே ஒன்றுமில்லை…

inga enna solluthu 1212‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் முதல் முறையாக சிம்புவும், ஆன்ட்ரியாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இவர்களிருவரைப் பற்றியும் கிசுகிசு தீயாய் பரவியது. இருவருக்குமிடையே காதல் என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால், இதைப் பற்றி அவர்களிருவமே எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இதனிடையே, ‘இங்க என்ன சொல்லுது’ படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விடிவி கணேஷ், அவர்களிருவருக்கும் இடையே ஒன்றுமேயில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

“யார் இதை கிளப்பி விட்டது என்றே தெரியவில்லை. சிம்பு – ஆன்ட்ரியாவிற்கு இடையே படத்தில் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்குன்னு சொன்னத வேற விதமா எழுதிட்டாங்க. நான் வேறு எந்த அர்த்தத்திலயும் சொல்லலை,” என தெரிவித்துள்ளார்.

நீங்க சொல்லிட்டீங்க இல்லை, இனி யாரும் தப்பா எழுத மாட்டாங்க…

 

Read Previous

தமிழ் சினிமாவில் கவிழும் கார்ப்பரேட் நிறுவனங்கள்…

Read Next

த்ரிஷாவின் ’ஸ்லிம்’ ரகசியம்…