1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜேஎஸ்கே வெளியிடும் 3 படங்கள்…

    பல தரமான வெற்றிப் படங்களை வெளியிடும் நிறுவனமான ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரே நாளில் 3 படங்களை வெளியிட உள்ளது. ‘சிவப்பு எனக்கு பிடிக்கும், ஆள், மேகா’ ஆகிய படங்களை அந்நிறுவனம் ஜுன் மாதம் 13ம் தேதியன்று வெளியிடுகிறது. ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தை…

கோச்சடையான் – சென்னையில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகள்…

ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க மீடியா ஒன் குளோபல் தயாரிப்பில் நாளை மறுநாள் 23ம் தேதியன்று வெளியாக உள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மல்டிபிளக்ஸ் எனப்படும் திரையரங்குகளான பீனிக்ஸ் மால் லக்ஸ் வளாகத்தில் 5 திரையரங்குகள், சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3…

பேய் படம்னாலே வீட்டை சுத்திதான் கதை நகரும் – சுந்தர் .சி

‘உள்ளத்தை அள்ளித் தா’ முதல் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வரை தனது கலகலப்பான நகைச்சுவைப் படங்களால் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் இயக்குனர் சுந்தர் .சி. முதன் முறையாக ‘அரண்மனை’ என்ற ஒரு ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பாக…

ரஜினிகாந்துக்கு மோடி நன்றி…

இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் ட்விட்டர் மூலம் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துக்கு சற்று முன்னர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து ரஜினிகாந்த்துக்கு பதில் ட்வீட் செய்துள்ளார். ‘உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. இந்த வெற்றி இந்திய மக்களின்…

தேர்தல் 2014 : நட்சத்திரங்களின் வெற்றி, தோல்வி…

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற, தெலுங்கானா, சீமாந்திரா மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து எந்த நட்சத்திரங்களும் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், தமிழில் நடித்துள்ள மற்றும் அக்கம் பக்கத்து மாநில நட்சத்திரங்கள் சிலர்  போட்டியிட்டார்கள். அவர்களில் சிலர் வெற்றியும், சிலர் தோல்வியும் அடைந்துள்ளார்கள். சீமாந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில்,…

நேற்று வெளியான ஒரே தமிழ்ப் படம்…

2014ம் ஆண்டு ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இடைவெளி இல்லாமல் ஏதாவது ஒரு படம் வெளிவந்து கொண்டேயிருக்கிறது. அந்த விதத்தில் நேற்று எந்த படமும் வெளியாகவில்லை என சில இணையதளங்களும், ட்விட்டரில் தங்களைப் பெரிய சினிமா பத்திரிகையாளர்களாக சித்தரிப்பவர்களும் செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். ஆனால், நேற்று ‘என் நெஞ்சை…

பாலா தயாரிப்பில் சற்குணம், அதர்வா…

இயக்குனர் பாலா அவரது பி ஸ்டுடியோஸ் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் மிஷ்கின் இயக்கத்தில், பாலா தயாரிக்கும் ‘பிசாசு’ படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பாலா அடுத்து தயாரிக்கவிருக்கும் படத்தை ‘நய்யாண்டி’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். பாலாவின் ‘பரதேசி’ படத்தில்…

நகரி தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி…

ஆந்திர மாநிலம் தெலுங்கானா, சீமாந்திரா என இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு மாநிலங்களுக்கும் பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. சீமாந்திரா மாநிலத்திற்கு உட்பட்ட சென்னைக்கு அருகே உள்ள நகரி தொகுதியில் நடிகை ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள்…

மோடி, ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து…

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கும், தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை உருவாக்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ட்விட்டர் மூலம் மோடிக்கு அவர் தெரிவித்த வாழ்த்து…. “அன்புள்ள நரேந்திர மோடிஜிக்கு வரலாற்று சாதனை படைத்ததற்காக மனமார்ந்த…

‘காட்ஸிலா’ இன்று வெளியாகிறது…

தோஹோ சீரீஸ், ஜப்பானில் உருவான ‘காட்ஸிலா’ படங்கள் வெகு பிரபலம். முதன்முதலாக, 1998-இல் தான், ‘காட்ஸிலா’ படம், அமெரிக்க தயாரிப்பாக உருவாக்கப்பட்டது. 2014-வருடத்தின் மிகப் பெரிய 3D படைப்பு தான் வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த ‘காட்ஸிலா’ படம். 160 மில்லியன்  அமெரிக்க டாலர் செலவில் தயாராகியுள்ள இப்படம்,…