அமலா பாராட்டிய ‘சைவம்’…

saivam_00010நடிகை அமலா பாலின் கணவர் விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்தை நடிகை அமலா பாராட்டியுள்ளார்.

அமலா பால் யார் என்று இன்றைய ரசிகர்களுக்குத் தெரியும், அமலா யார் என்பது இன்றைய ரசிகர்களுக்குத் தெரிந்திருக்காது. 80களில் அம்சமான நடிகையாகத் திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்தான் அமலா. பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்திலேயே செட்டிலாகி விட்டார்.

தன் மனைவி பெயரும் அமலா என்பதால்தானோ என்னமோ ஹைதராபாத்தில் அமலாவுக்கென தனியாக ‘சைவம்’ படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார் இயக்குனர் விஜய்.

விலங்கு நல ஆர்வலரான அமலா படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

“சைவம்’ படம் ஒரு அருமையான கலாச்சாரப் பதிவு. பிராணிகளிடம் அன்பு செலுத்த வேண்டும், நமது கலாச்சாரத்தை மறந்துவிடக் கூடாது என்ற மையக் கருத்தை வலியுறுத்தியிருக்கிறது. எதிர்கால தலைமுறையினருக்கு இந்தப் படம் ஒரு வழிகாட்டியாக இருக்கும். இந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

‘சைவம்’ வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.

 

Read Previous

நான்கு மொழிகளில் ‘ராணி’…தியாகராஜன் தயாரிக்கிறார்…

Read Next

ஜுலை மாதம் ‘திருடன் போலீஸ்’…

Most Popular