சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால், அவர் மீது தனுஷ் பொறாமை கொண்டிருக்கிறார் என்றும், இருவருக்குமிடையே பிரச்சனை என்றும் செய்திகள் வெளிவந்தன.
தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை வாங்குவதை விட சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், இவற்றை கடுமையாக மறுக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
“எனக்கும் தனுஷுக்கும் இடையில இருக்கிற நட்பு மாறாம அப்படியேதான் இருக்கு. அவர் என் மேல பொறறாமைப்படறதுக்கு காரணமே இல்லை. என் மேல நம்பிகை வச்சி நான் நல்லா வருவன், அவரை விட மேல வருவன்னு சொன்னதே அவர்தான். அப்படி நடந்தால் அதப் பார்த்து அவர் சந்தோஷம்தான் படுவாரு.
முன்னாடி மாதிரி நாங்க அடிக்கடி சந்திச்சிக்கிறதில்லை. அதுதான் இந்த மாதிரி செய்திலாம் வர்ற காரணமா இருக்கு. என்னோட அடுத்த படத்தைத் தயாரிக்கிறதே அவர்தான். நேர்ல அடிக்கடி பார்த்துக்கறதில்லையே தவிர போன்ல அடிக்கடி பேசிக்கிறோம்,” எனச் சொல்கிறார் சிவகார்த்திகேயன்.
ஏம்பா…கிசு கிசு ரைட்டர்ஸ்…அதான் சிவகார்த்திகேயனே சொல்லிட்டாருல்ல…வேற ஏதாச்சும் புதுசா டிரை பண்ணுங்க…