நயன்தாரா 20 லட்சம் உதவி – விஜய், அஜித் எங்கே போனார்கள் ?

தமிழ் சினிமா தொழிலாளர்கள் அதிகம் கொண்ட அமைப்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இதில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

இவர்கள் தினமும் படப்பிடிப்புக்குச் சென்றால்தான் வருமானம். அதை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும். எனவே, திரைப்படத் துறையில் வசதியாக உள்ளவர்கள் உதவி செய்ய முன் வர வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்று ரஜினிகாந்த், சூர்யா குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி அளித்தனர். 

நடிகைகளில் சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே 1 லட்சம் அளித்திருந்தார். இன்று நடிகை நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கி உள்ளார்.

ஆனால், முன்னணி ஹீரோக்களான கமல்ஹாசன், விஜய், அஜித் இதுவரையிலும் அவர்கள் படங்களுக்காக உழைக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்காக எந்தவித நிதியுதவியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரானோ வந்த பிறகு கமல்ஹாசன் அறிக்கையாவது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். விஜய், அஜித் எங்கே போனார்கள

Read Previous

டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார் பிரதமர் – கமல்ஹாசன்

Read Next

கொரானோ அட்வைஸ் – தமன்னாவின் தமிழ் வீடியோ

Most Popular