கொரானோ வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பல சினிமா நடிகர்கள், நடிகைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை வெளியிட்டு வருகிறது.
அதில் நடிகை தமன்னாவும் ஒரு வீடியோவில் பங்கேற்றுள்ளார். தமிழில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ள அந்த வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமன்னா தான் கலந்து கொள்ளும் தமிழ் சினிமா சம்பந்தமான நிகழ்வுகளில் தமிழில்தான் பேசுவார்.
அவருடைய கொரானோ வைரஸ் வீடியோவிலும் அவரே தமிழில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன்னா வீடியோவைப் பார்க்க கீழே க்ளிக் செய்யவும்…
https://twitter.com/COVIDNewsByMIB/status/1246292690443972609