டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார் பிரதமர் – கமல்ஹாசன்

இன்று ஏப்ரல் 3ம் தேதி காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு உரையாற்றினார்.

அதில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில், வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். 9 நிமிடங்களுக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். அல்லது செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், ஒன்று கூடி விளக்கு ஏற்றக் கூடாது,” என்றார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு சற்று முன்னர் டிவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.

“பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்,” என பிரதமரின் விளக்கேற்றும் கோரிக்கையை விமர்சித்து

Read Previous

டாப்சி – ‘பி’ கிரேடு நடிகை, கிண்டலடிக்கும் கங்கனா சகோதரி

Read Next

நயன்தாரா 20 லட்சம் உதவி – விஜய், அஜித் எங்கே போனார்கள் ?

Most Popular