டாப்சி – ‘பி’ கிரேடு நடிகை, கிண்டலடிக்கும் கங்கனா சகோதரி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வெளியிட்ட வீடியோவில், வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, மொபைல் போன்கள், டார்ச்லைட் மூலம் ஒளியேற்றுங்கள் என மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அவரது வீடியோ வெளிவந்த பின் நடிகை டாப்சி, அவருடைய டிவிட்டரில், “புதிய டாஸ்க் வந்துவிட்டது, ஹே ஹே ஹே,” என பதிவிட்டிருந்தார்.

அதற்கு ‘தலைவி’ படத்தின் நாயகியும் ஹிந்தி நடிகையுமான கங்கனா ரணவத்தின் அக்கா ரங்கோலி சாண்டல் கடுமையாக விமர்சனம் செய்தார்.

“பி கிரேடு நடிகைகள் ஏன் இதற்காக சூடாக வேண்டும், இது சிம்பிளான டாஸ்க் தானே‘’ என்று கிண்டலடித்துள்ளார். 

டாப்ஸி நடித்த ‘மிஷன் மங்கள்’ படம் வெளிவந்த போது கூட டாப்ஸி, கங்கணாவின் சீப்பான காப்பி என்று விமர்சனம் செய்தவர்தான் ரங்கோலி.

டாப்ஸியின் இன்றைய டிவிட்டர் பதிவுக்கு, 8 ஆயிரம் கமெண்ட்டுகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிடிவீட்டுகளும் 48 ஆயிரம் லைக்குகளும் இதுவரை வந்துள்ளன.

https://twitter.com/taapsee/status/1245919799311388674

Read Previous

விஜய் டிவியில் மீண்டும் ‘லொள்ளு சபா’

Read Next

டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார் பிரதமர் – கமல்ஹாசன்

Most Popular