6 மாநிலங்களுக்கு விஜய் கொரானோ நிதியுதவி

கொரானோ தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகத்திலிருந்து இதற்கு முன் ராகவா லாரன்ஸ், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே பெரிய அளவில் நன்கொடை அளித்தனர். 

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இதுவரை மாநில அரசுகளுக்கோ, மத்திய அரசுக்கோ எந்த நிதியுதவியும் செய்யவில்லை.

இப்போது நடிகர் விஜய் 6 மாநிலங்களுக்கும் பிரதமரின் நிவாரணநிதிக்கும் நன்கொடை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு 50 லட்சம், பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம், பெப்ஸி தொழிலாளர் அமைப்புக்கு 25 லட்சம், கேரளா அரசுக்கு 10 லட்சம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா 5 லட்சமும், அவரது ரசிகர் மன்றத்திற்கு தனியாக ஒரு தொகையும் தர உள்ளார்.

விஜய் நடிக்கும் படங்கள் தென்னிந்திய அளவில் வரவேற்பைப் பெறுபவை. மேலும், அவருக்கு தென்னிந்தியா முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதனால்தான் அவர் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் நன்கொடை அறிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த நன்கொடைக்கு மற்ற மாநிலத்தவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

Read Next

நெட்பிளிக்ஸ் – சந்தாதாரர்கள் இரு மடங்கு உயர்வு

Most Popular