திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு யு டியுப் வீடியோ தளம்தான் பெரிய பயன்பாட்டில் இருந்தது.
ஆனால், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட சர்வதேச ஓடிடி நிறுவனங்களின் வருகை இந்திய மார்க்கெட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது, டிவிக்களில் தொடர்கள் நிறுத்தப்பட்டது ஆகியவற்றின் காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் ஓடிடி தளங்களில் புதிய சந்தாதாரர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம், 2020ம் ஆண்டின் முடிவடைந்த முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் புதிதாக 1 கோடியே 58 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. இது எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்கிறார்கள்.
தற்போது மொத்தமாக 18 கோடியே 20 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளார்.
இதன் மூலம் இந்த காலாண்டில் மட்டும் 577 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
நெட்பிளிக்ஸ் போலவே அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களுக்கும் புதிய சந்தாதாரர்கள் அதிகம் கிடைத்திருப்பார்கள். அதற்கு இந்த ஊரடங்கு காலம் பேருதவி புரிந்திருக்கிறது.