விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

கொரானோ நோய் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சென்னை டாக்டர் ஒருவரது உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் சிலர் தடுத்து நிறுத்தியது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல அரசியில், சினிமா பிரபலங்கள் அதற்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்படி மரணமடைபவர்களை நல்லடக்கம் செய்ய முடியவில்லை என்றால் அவருக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியைத் தருவதாக நேற்று அறிவித்தார்.

அவரது அறிவிப்புக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். விஜயகாந்தின் இந்த நல்ல குணத்திற்கு மாநிலம் கடந்தும் பாராட்டு கிடைத்துள்ளது.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், “உன்னதமான, அற்புதமான செயல்” என விஜயகாந்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read Previous

பெப்ஸி அமைப்புக்கு 5 லட்சம் வழங்கிய ‘தலைவி’ கங்கனா

Read Next

6 மாநிலங்களுக்கு விஜய் கொரானோ நிதியுதவி

Most Popular