பெப்ஸி அமைப்புக்கு 5 லட்சம் வழங்கிய ‘தலைவி’ கங்கனா

கொரானோ ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டிலும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், திரைப்படத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு பெப்ஸி அமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. சில நடிகர்கள், நடிகைகள் அதற்காக உதவிகளை வழங்கினார்கள்.

‘தலைவி’ படத்தில் நடிக்கும் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் பெப்ஸி அமைப்புக்காக 5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். மேலும், ‘தலைவி’ படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகவும் 5 லட்சம் கொடுத்துள்ளார்.

நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், காஜல் அகர்வால் ஆகிய சில நடிகைகள் மட்டுமே இதற்கு முன் பெப்ஸி அமைப்புக்கு உதவி வழங்கியிருக்கிறார்கள்.

தமிழில் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் நன்கொடை வழங்காத நிலையில் தமிழில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கங்கனா ரணவத் தமிழ் தொழிலாளர்களுக்காக உதவி செய்திருப்பது ரசிகர்களால் பாராட்டப்படுகிறது

Read Previous

என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

Read Next

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

Most Popular