பொங்கலுக்கு திட்டமிடப்படும் ‘வா வாத்தியார்’

பொங்கல் வெளியீட்டுக்கு கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திட்டமிடப்பட்டு வருகிறது.

‘ஜப்பான்’ படத்துக்குப் பிறகு, கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

‘மெய்யழகன்’ படத்தினைத் தொடர்ந்து ‘வா வாத்தியார்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எப்போது வெளியீடு என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தினை பொங்கலுக்கு வெளியிடலாம் என்று தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது. ‘மெய்யழகன்’ வெளியீட்டிற்குப் பிறகு ‘வா வாத்தியார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

Read Previous

மதிமாறன் இயக்கத்தில் சூரி

Read Next

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்

Most Popular