மதிமாறன் இயக்கவுள்ள புதிய படமொன்றில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார்.
‘கருடன்’ வெற்றிக்குப் பிறகு, மீண்டும் அதே தயாரிப்பாளர் குமார் தயாரிப்பில் படமொன்றில் நடிக்கவுள்ளார். அதனை ‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாத் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை ‘செல்ஃபி’ படத்தினை இயக்கிய மதிமாறன் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சூரி நடிக்கும் படத்தின் கதையினை வெற்றிமாறனே கொடுத்திருக்கிறார். இதற்கான திரைக்கதையினை மட்டுமே மதிமாறன் எழுதி வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு தான், அடுத்து நடிக்கவுள்ள படத்தினை முடிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார் சூரி.