விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்

தேசிய விருது விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் நித்யா மேனன்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

இதனிடையே, இந்தப் படத்தில் நித்யா மேனன் நடிப்புக்கு “சிறந்த நடிகை” தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை முன்வைத்து அவருடைய நடிப்பில் என்ன புதுமை இருக்கிறது, லாபி செய்து வாங்கியிருக்கிறார்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் இணையத்தில் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்துக்கும் பதிலடிக் கொடுத்துள்ளார் நித்யா மேனன்.

நித்யா மேனன் அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பதாவது:

“’திருச்சிற்றம்பலம்’ படத்தில் எனது நடிப்பை புரிந்துக் கொண்ட தேர்வுக் குழுவிற்கு நன்றி. உடல் எடையை அதிகரித்து நடிப்பது, குறைத்து நடிப்பது போன்றவை எல்லாம் சிறந்த நடிப்பு கிடையாது. அவை அனைத்தும் நடிப்பின் ஒரு பகுதி தானே தவிர, முழுமையாக அது தான் நடிப்பு என்று சொல்லிவிட முடியாது. அந்த கதாபாத்திரத்திற்காக எவ்வளவு உழைத்தேன் என்பது எனக்கு தெரியும். ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு முன்புவரை நாயகனுக்கு இணையாக எந்தவொரு படத்திலும் நடித்ததில்லை. ஆகையால் இந்த தேசிய விருது எனக்கு மிகவும் ஸ்பெஷல்”

இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

Read Previous

பொங்கலுக்கு திட்டமிடப்படும் ‘வா வாத்தியார்’

Read Next

தங்கலான் படத்தில் உண்மை இருந்தது – விக்ரம்