ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார்

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.

’ஜப்பான்’ தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார் ராஜுமுருகன்.  அவரது அடுத்த படத்தினை அம்பேத்குமார் தயாரிக்க முன்வந்தார். இதற்கான கதை விவாதம் பணிகள் முடிந்து, நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ராஜுமுருகன்.

மணிகண்டன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சிலரிடம் பேசினார். இருவருமே நடிக்க சம்மதம் என்றாலும், தேதிகள் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இறுதியாக அதே கதையினை சசிகுமாரிடம் சொல்லி ஒ.கே செய்துள்ளார் ராஜுமுருகன்.

சசிகுமாருக்கும் கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக தேதிகள் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஜூனியில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இந்தப் படத்தில் முற்றிலும் புதிய அணியோடு பணிபுரிய முடிவு செய்துள்ளார் ராஜுமுருகன்.

Read Previous

முடிவானது கூட்டணி: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரன்வீர் சிங்

Read Next

மே 17-ம் தேதி வெளியாகிறது ‘மகாராஜா’?