விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ படத்தினை மே 17-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் கஷ்யாப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.
ஐபிஎல், மக்களவைத் தேர்தல் என இருந்ததால் சரியான வெளியீட்டுத் தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது மே 17-ம் தேதி வெளியிடலாம் என்று ‘மகாராஜா’ படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான விநியோக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் 50-வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் ஓடிடி உரிமையை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியீட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.