சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனுஷ்

’அமரன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் படத்தினை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘அமரன்’ படத்தினை இயக்கி வருகிறார் ராஜ்குமார் பெரியசாமி. இதனை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘அமரன்’ படத்தினை முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இதற்கான சந்திப்பு, ஒப்பந்தம், கதை விவாதம் அனைத்துமே முடிந்துவிட்டது. தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சென்னையில் ‘அமரன்’ படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து வெளியாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் ஆகலாம். இதனால் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்கலாம் எனத் திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

மே 17-ம் தேதி வெளியாகிறது ‘மகாராஜா’?

Read Next

ஒரே மாதத்தில் 2 கமல் படங்கள்

Most Popular