விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2வது பாடல் வெளியீடு

சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்க வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.

ஆகஸ்ட் 14ல் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள், ‘பட்டாம்பூச்சி’ ஏற்கெனவே வெளியாகி இருந்தது. தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கி உள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, சூர்யா அவரது சொந்தக் குரலில் பாடியுள்ளார். அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் உயிர் கொடுத்துள்ளன.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை தனது துள்ளலான மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதிய வரிகள், திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.

Read Previous

பிரஜாபதி – டிரைலர் வெளியீட்டு விழா