விஜய் ஆண்டனியின் ‘அப்பாகுட்டி’, விரைவில் ரிலீஸ்

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பா மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான அப்பா – மகள் பாசப் பிணைப்பைக் காட்டும் வகையில் அந்த போஸ்டர் அமைந்துள்ளது.

மு. மாறன் இயக்கத்தில் ‘அப்பாகுட்டி’ படம், பேமிலி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. அப்பா மற்றும் மகளுக்கு இடையே உள்ள அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அப்பாகுட்டி படத்தின் அனைத்து தயாரிப்புப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. விளம்பரப் பணிகளைத் தீவிரமாகத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர், விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளனர்.

இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்பிரியா இசை, அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிசி அந்தோணி, குமார் நடராஜன், விஜயன், பிரவீனா, ஹரிதா மற்றும் ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Read Previous

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் டப்பிங் ஆரம்பம்