தம்பியை அடுத்து நடிகரான அண்ணன்…

enna-satham-intha-neram‘ஜெயம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜா. இந்த படத்தில் தம்பி ரவியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அண்ணன், தம்பி இருவருமே ‘ஜெயம்’ ராஜா, ‘ஜெயம்’ ரவி அழைக்கப்பட்டு வருகின்றனர்.

ஜெயம் ரவியும் தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார்.

இப்போது ஜெயம் ராஜாவும் ஒரு படத்தில் நடிகராக அறிமுகமாமகிறார்.

குரு ரமேஷ் என்பவர் இயக்கும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜா நடிக்கிறார்.

ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒரே தோற்றம் கொண்ட 8 வயது ஆன நான்கு பெண் குழந்தைகளான அதீதி, ஆக்ரிதி, அக்‌ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது மிகவும் வித்தியாசமான ஒன்று.

மேலும் இந்த படத்தில் ‘காதல் மன்னன்’ படத்தின் ஹீரோயினான மானு, நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ், புரளவன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, சிவசங்கர், மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Read Previous

கௌதமுக்கு சூர்யா 10 கோடி கொடுத்தாரா…?

Read Next

நல்ல கதைக்காக சம்பளத்தை குறைத்துக் கொள்வேன் – சமந்தா

Most Popular