வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், செல்ல அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஜுலை 3ம் தேதி வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’.
இப்படம் 3 நாட்களில் 22 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும், ரசிகர்களின் வரவேற்பும் அதிகமாக இருந்ததால் இது சாத்தியம் ஆகியுள்ளது.
இந்த வருடத்தில் குடும்பப்பாங்கான படங்களுக்கும், நகைச்சுவைப் படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகிறார்கள். அவை இந்த ‘கட்டா குஸ்தி 2’ படத்திலும் இருப்பதால் இப்படத்திற்கு இப்படி ஒரு ஓபனிங் கிடைத்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த இரண்டு இரண்டாம் பாகப் படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால், இந்த இரண்டாம் பாகப் படம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.