மெடிக்கல்கிரைம் திரில்லர் ‘நிறம்’

பலராம் கிருஷ்ணா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நிறம்’.

கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜிதேஷ் சாய் வழங்குகிறார்.

மருத்துவத் துறையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், மருத்துவப் பின்னணியில் கிரைம் திரில்லர் படமாக ‘நிறம்’ உருவாகியுள்ளது. மருத்துவத் துறையில் நிகழும் ஒரு முக்கியமான சம்பவத்தை மையமாகக் கொண்டு பரபரப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். விவேகா, பா. விஜய் பாடல்களை எழுதியுள்ளனர். பிரவஷ்தி, ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடல்களைப் பாடியுள்ளனர். சாய் பாரதி, சங்கர் நடன இயக்குநர்களாகவும், உதய் குமார் ஒலி கலவைப் பணிகளையும், டியூனி ஜான் வடிவமைப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நிறம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Read Previous

ஹலோ காதல் – டிரைலர் வெளியீட்டு விழா