கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தது திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.
ஏனென்றால்,கௌதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படம் மூலம்தான் சூர்யாவுக்கு ஒரு வியாபார ரீதியிலான ஒரு பெயர் கிடைத்தது.
கௌதம் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்காமல் விலகியது ரசிகர்களிடமும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களில் நடந்த ஒரு நிகழ்வு சூர்யாவைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது என்னவென்றால், கௌதம் மேனன் படத்தில் நடிக்கவில்லையென்றாலும் அவருக்கு உதவும் விதமாக படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையுடன் சேர்த்து மொத்தமாக 10 கோடி ரூபாயை சூர்யா கௌதமிடம் அளித்தாராம்.
இதற்கு முன்னும், சூர்யாவை ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த் சூர்யாவை வைத்து படம் எடுக்க கேட்ட போதும், அதைத் தவிர்த்து அவருக்கும் அப்போது நிதியுதவி அளித்தார் என்று சொல்கிறார்கள்.
சூர்யாவின் அறிக்கைக்கு பதில் அறிக்கையை கௌதம் மேனன் ஏன் தரவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது.
இருந்தாலும் கௌதமிடமிருந்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை எதிர்பார்க்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்…