‘மங்காத்தா’வில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்…

venkat prabhuவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்த மாபெரும் வெற்றிப்படமான ‘மங்காத்தா’வில் விஜய் நடிக்க ஆசைப்பட்டுள்ளார்.

சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு , அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு, கூட்டணியை வைத்து படங்களை இயக்கும் ஆசை உள்ளது என்று சொன்னார்.

நேற்று ‘பிரியாணி’ படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்து  நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய வெங்கட் பிரபு, “இது வரை 5 படங்களை இயக்கி விட்டேன். ‘சென்னை 28’ படத்தை என்னை இயக்க வைத்த தயாரிப்பாளர் சரணுக்கு நன்றி.

அந்த படத்திற்கு கதை மட்டுமே நான் தருவதாக இருந்தது. சமுத்திரக்கனி இயக்குவதாகத்தான் பேசினோம். ஆனால், சரண்தான் என் மீது நம்பிக்கை வைத்து ‘சென்னை 28’ படத்தை இயக்க வைத்தார்.

நான் தயங்கவும் காரணம் இருந்தது, நான் யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காதவன், சினிமா பற்றியும் படிக்காதவன், அதையும் மீறி படத்தை இயக்கி வெற்றி பெற்றேன்.

என்னுடைய ஒவ்வொரு படமும் வேறு வேறு விதத்தில் அமைந்த படங்கள்தான்.

‘மங்காத்தா’  படத்தைப் பார்த்ததும் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க கூப்பிட்டிருந்தால் நான் நடித்திருப்பேனே என்று விஜய் சொன்னார்.

‘மங்காத்தா’ படப்பிடிப்பில் இருக்கும் போது அஜித், விஜய் இருவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்தது மறக்க முடியாத நிகழ்வு. அப்போது விஜய், ‘வேலாயுதம்’ படப்பிடிப்பில் இருந்தார். இரு குழுவினருக்காகவும் அஜித் பிரியாணி சமைத்துப் போட்டார். மறக்க முடியாத நாட்கள் அவை.

அடுத்து சூர்யா என்னிடம் மாட்டியிருக்கிறார். ஏப்ரல் முதல் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது, ” என்றார் வெங்கட் பிரபு.

உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள்…

Read Previous

அஜித், விஜய்க்கு போட்டியாக ‘ஜாக்கி சான்’…

Read Next

தமிழ் சினிமாவில் ‘கல்யாண வைபோகம்’…

Most Popular