அஜித், விஜய்க்கு போட்டியாக ‘ஜாக்கி சான்’…

police story 2013_00004அஜித் நடிக்கும் ‘வீரம்’, விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளி வர உள்ளன.

இந்த படங்களுடன் ‘கோச்சடையான்’ முதலில் வெளியாகும் என்றார்கள். அதன் பின் அப்படம் இந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.

இப்போது உலக சூப்பர்ஸ்டார் ‘ஜாக்கி சான்’ நடித்துள்ள ‘போலீஸ் ஸ்டோரி 2013’ படம் பொங்கலுக்கு வெளியாகி ‘வீரம், ஜில்லா’ படங்களுடன் போட்டி போட உள்ளது.

இவரது “போலீஸ் ஸ்டோரி” படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் தொடர் படைப்பாக இப்பொழுது “போலீஸ் ஸ்டோரி 2013” படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் உலகம் முழுக்க இம்மாத இறுதியில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வெளியீடாக வருகிறது.

தமிழகமெங்கும் 200-க்கும் அதிகமான திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது.

மேலும் இப்படத்தின் சிறப்பு அம்சமாக முதன்முறையாக ஜாக்கிசான் ஒரு பாடலை பாடியுள்ளார். யு – டியூபில் பாப்புலராக இருக்கும் இப்பாடல் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

இப்படத்தை தமிழ் நாட்டில் சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் வெளியிடுகிறார். ‘தளபதி’ ‘முத்து’ ‘வில்லு’ ‘குருவி’ ‘ ராம்போ – 3’  போன்ற 250-க்கும் மேற்பட்ட ஆங்கிலம், தமிழ் படங்களை என்.எஸ்.சி ஏரியாவில் 32வருடமாக விநியோகம் செய்துள்ள இவர் இப்படத்தை 3D-யில் வெளியிடுகிறார்.

Read Previous

‘தூம் – 3’ – மூன்றே நாளில் 170 கோடி வசூல்…

Read Next

‘மங்காத்தா’வில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்…

Most Popular