‘தூம் – 3’ – மூன்றே நாளில் 170 கோடி வசூல்…

dhoom-3-collection-newsயாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் ஆமீர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, காத்ரீனா கைப் மற்றும் பலர் நடித்து கடந்த 20ம் தேதி உலகெங்கும் வெளியான ஹிந்தித் திரைப்படம் ‘தூம் 3’.

இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. மற்ற தமிழ்ப்படங்களுக்குப் போட்டியாக இப்படம் சென்னையில் வசூலைக் குவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் முதல் நாள் வசூலாக  36 கோடி ரூபாயையும், இரண்டாவது நாளில் 33 கோடி ரூபாயையும், மூன்றாவது நாளில் 36 கோடி ரூபாயையும் வசூல் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு வசூலையும் சேர்த்து மொத்தமாக 107 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் மூன்று நாட்களில் 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஆக, உலகம் முழுவதும் மொத்த வசூலாக 170 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இதன் மூலம், ‘சென்னை எக்ஸ்பிரஸ், க்ரிஷ் 3’ படங்களின் முதல் வார வசூலை இப்படம் கடந்துள்ளது.

முதன் முறையாக இந்திய திரைப்பட வரலாற்றில் இப்படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்கிறார்கள்.

பாலிவுட் வட்டாரங்களில் இந்த வசூல் கணக்குத்தான் ஒரே பேச்சாக உள்ளதாம்…

 

Read Previous

‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ – வட சென்னை கதை…

Read Next

அஜித், விஜய்க்கு போட்டியாக ‘ஜாக்கி சான்’…

Most Popular