தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு சீசன் எட்டிப் பார்க்கும், அதன் பின் சில மாதங்கள் கழித்து காணாமல் போய் விடும்.
இப்போது புதிதாக ‘கல்யாண சீசன்’ வைபோகமாக ஆரம்பமாகியுள்ளது.
இதைத் தொடங்கி வைத்த பெருமை ‘கல்யாண சமையல் சாதம்’ படத்திற்குத்தான் உண்டு. இந்த படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது இரு படங்கள் கல்யாணத்தை மையமாக வைத்து தயாராகிக் கொண்டிருக்கின்றன.
படங்களின் பெயரே அவை எந்த மாதிரியான படங்கள் என்பதை புரிய வைக்கும்.
ஒரு படத்தின் பெயர் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ , இன்னொரு படம் ‘ஆஹா கல்யாணம்’.
‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் இந்து, முஸ்லிம் திருமணங்களைப் பற்றியும் , உணவு பழக்க வழக்கங்களைப் பற்றியும் காட்டுகிறார்களாம்.
‘ஆஹா கல்யாணம்’ படத்தில் தென்னிந்தியாவின் பல்வேறு திருமணச் சடங்குகளை காட்டுகிறார்களாம். இப் படத்தின் நாயகனும், நாயகியும் திருமணத்தை நடத்தித் தரும் ஏஜென்சி வைத்திருப்பதால் அவ்வளவு திருமணக் காட்சிகளாம்.
திருமண வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு பையனும், பெண்ணும் காதல் பார்வை பரிமாறிக் கொள்வதே சுவாரசியமான நிகழ்வுதான்.
இன்னும் தெரியாமல் எத்தனை படங்கள் தயாராகி வருகின்றன எனத் தெரியவில்லை…
‘ஆஹா கல்யாணம்’ னு மட்டும் சொல்ல வைங்க, நிறைய படங்கள் அதே மாதிரி வந்து ‘ஐயோ…கல்யாணமா’ன்னு சொல்ல வச்சிடாதீங்க…