வருத்தப்பட வைத்த ‘வாலிபர் சங்க‘ 100வது நாள் விழா…

vvs 100th day‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 100வது நாள் விழா சில நாட்களுக்கு முன் (21-12-2013) சென்னையில் உள்ள ஹயாத் ஐந்து நட்சத்திர ஓட்டலில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு அப்படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும், படத்தில் பணியாற்றிய முக்கியமானவர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

படம் வெற்றி பெற காரணமாயிருந்த பத்திரிகையாளர்களுக்கும் எந்தவித அழைப்புமில்லை.

படம் வெளிவருவதற்கு முன் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து சென்னையில் உள்ள மிகப் பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர் சந்திப்பு, சத்யம் திரையரங்கில் இசை வெளியீடு, படம் வெளியான பின் மற்றொரு பெரிய ஓட்டல் ஒன்றில் சிவகார்த்திகேயனின் நன்றி சந்திப்பு என படத்தை பிரமோஷன் செய்தார்கள்.

ஆனால், படம் வெற்றி பெற்று 100 நாள் ஓடியதும், படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பத்திரிகையாளர்களை அழைக்காமல் இந்த விழாவைக் கொண்டாடியதில் பத்திரிகையாளர்கள் நிறையவே வருத்தப்பட்டு விட்டார்கள்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’னு பேரை வச்சிட்டு பத்திரிகையாளர்கள் வருத்தத்தை பத்தி அவங்க ஏன் வருத்தப்படப் போறாங்க…

Read Previous

தமிழ் சினிமாவில் ‘கல்யாண வைபோகம்’…

Read Next

கூகுள் தேடல் – ஆந்திராவில் முதலிடத்தில் ‘துப்பாக்கி’…