கொரானோக்குப் பிறகு – காஜல் அகர்வால் தந்த அற்புத யோசனை

கொரானோ வைரஸ் பரவலால் 21 நாள் ஊரடங்கில் 13 நாட்களைக் கடந்திருக்கிறோம். இந்த நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எந்தவிதமான வியாபாரமும் நடைபெறவில்லை.

இந்த ஊரடங்கு 21 நாள் வரை நீடித்த பின் தளர்த்தப்படுமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்தபின் மீண்டும் அந்த வியாபாரங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால் நாம் சில விஷயங்களை கண்டிப்பாகக் கடைபிடித்தாக வேண்டும். அவை என்ன என்பது பற்றி நடிகை காஜல் அகர்வால் அற்புதமான யோசனை ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் சொன்னதைக் கேட்டுப் பின்பற்றினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாமும் செய்வோம்….

““கொரானோ கடைசியாக வெளியில் அதுவாகவே வெளியே போய் அபாயம் நீங்கிய பின் நமது நாட்டின் நலனுக்காக சிலவற்றைச் செய்வோம். நமது விடுமுறையை இந்தியாவில் மட்டும் கழிப்போம். உள்ளூர் உணவகங்களில் மட்டும் சாப்பிடுவோம். உள்ளூர் பழங்கள், காய்கறிகளை வாங்குவோம். இந்திய பிராண்டுகளை வாங்கி உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிப்போம். இந்த வியாபாரங்கள் மீண்டும் பழைய நிலைக்கு அதன் பாதையில் திரும்ப நமது உதவியில்லாமல் முடியாது. ஒருவருக்கொருவர் சிறிதளவேனும் உதவி செய்து வளர துணை நிற்போம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Previous

விளக்கேற்றம் – வழக்கம் போல் விஜய், அஜித் ஆப்சென்ட் ?

Read Next

A Lion’s Journey -எம்.எஸ். தோனி பற்றிய வீடியோ

Most Popular